வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!

Date:

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பாதாள உலக குழு உறுப்பினர்களால் கோரப்படும் கப்ப பணத்தை வழங்க வேண்டாம் என வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.

வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள விஷேட அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது

கப்பம் கோரி வர்த்தகர்கள் உள்ளிட்ட சிலரை அச்சுறுத்திய சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

இந்தநிலையிலேயே, இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதேநேரம், வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள பாதாள உலக குழு உறுப்பினர்களின் பெயர்களை பயன்படுத்தி நாட்டிலுள்ள சிலர் கப்பம் கோரும் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கை – ஈரான் வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி உரையாடல்!

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியும், இலங்கை...

நிதி அமைச்சில் சைபர் கொள்ளை: CID விசாரணை தீவிரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின்...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...