இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Date:

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ,மத்திய, மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Popular

More like this
Related

அனோஜன் சிவராசா அவர்களின் உயிரைக் காப்பாற்றவும், விடுதலைக்காகவும் சைவநெறிக்கூடம் விரைந்த வேண்டுகோள்

சுவிற்சர்லாந்தின் பேர்ன் நகரில் இயங்கி வரும் சைவநெறிக்கூடம், இலங்கைக் குடிமகனான திரு....

மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முஹமதின் மனைவி சித்தி ஹஸ்மா அலி 100வது வயதில் காலமானார்

மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதின் மனைவியான டாக்டர் சித்தி...

போக்குவரத்து விதிமீறல்களுக்கு ‘குறைபாட்டுப் புள்ளி’ முறை ஒக்டோபரில் ஆரம்பம்!

போக்குவரத்து விதிமீறல்களுக்கான ‘குறைபாட்டுப் புள்ளி’ (Demerit Points) முறையை நடைமுறைப்படுத்தும் ஆறு...

ஆசிய தற்காப்புக் கலை விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்று கம்பஹா சிறுவன் ஃபஹத் நவாஸ் சாதனை!

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெறவுள்ள ‘6 வது ஆசிய உள்ளக...