திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில்!

Date:

திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 9ஆம் திகதி முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய பாராளுமன்ற விவகாரக் குழு இதனை தீர்மானித்திருந்தது.

அதன்படி, எதிர்வரும் 9 ஆம் திகதி காலை 09.30 மணி முதல் 10.30 வரை வாய்வழி வினாவுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்போது தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கச் சட்டமூலத்திற்கான அலுவலகம் ஸ்தாபிக்கும் திருத்தச்சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, தேசிய நீரியல் திருத்தச்சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்கள் இடம்பெறவுள்ளன.

Popular

More like this
Related

உலக அமைதிக் குறியீட்டில் இலங்கை 14 இடங்கள் முன்னேற்றம்!

2026 உலகளாவிய அமைதிக் குறியீட்டில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதுடன், சமீபத்திய...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...