அரச தாதியர் சங்கம் இன்றும் பணிப்புறக்கணிப்பு!

Date:

அரச தாதியர் சங்கம் இன்று (17) காலை 7.00 மணி முதல் நாளை காலை 7.00 மணி வரை நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

சுகாதார அமைச்சருக்கும், நிதி இராஜாங்க அமைச்சருக்கும் இடையில் நேற்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலில் எதிர்பார்த்த நல்ல பதில் கிடைக்காத காரணத்தினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுதத் ஜயசிறி தெரிவித்தார்.

இதேவேளை, பல சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று (17) காலை 6.30 மணியளவில் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக துணை மருத்துவ ஒன்றிய முன்னணி தெரிவித்துள்ளது.

ஒரு வாரத்திற்குள் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிடின் மீண்டும் தொழில் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...