பாரிஸ் ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவு:தங்கப் பதக்கப் பட்டியலில் சீனா முதலிடம்

Date:

2024 ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் திகதி தொடங்கி 15 நாட்களுக்கு மேல் நடைபெற்ற நிலையில் இன்றுடன் (11) நிறைவடைகிறது.

இந்தநிலையில், 32 விளையாட்டுகளுக்கு அமைவாக 329 போட்டிகள் நடைபெற்றதுடன் போட்டிகளில் 10,714 வீரர்கள் பங்கேற்றனர்.

நேற்று (11) ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டிகளின் இறுதிப் போட்டிகள் இடம்பெற்றன.

இதில் ஆடவர் பிரிவில் முதலிடத்தை கனேடிய அணியும், பெண்களுக்கான போட்டியில் அமெரிக்காவும்  முதலிடத்தை பெற்றுக்கொண்டன.

தங்கப் பதக்கப் பட்டியலில் சீனா முதலிடம் பிடித்து 39 தங்கப் பதக்கங்களை வென்ற நிலையில் தங்கப் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா 38 தங்கப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும் அவுஸ்திரேலியா  18 தங்கப் பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...