அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் புதிய வரவு- செலவுத்திட்டத்தில் தீர்மானிக்கப்படும்!

Date:

கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பு வழங்குவது தொடர்பான தீர்மானம் முன்வரும் வரவு செலவு திட்டத்தில் உள்வாங்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் இறுதி காலப்பகுதியில் அரச ஊழியர்களினது சம்பளத்தை ஜனவரி மாதத்திலிருந்து ரூ.25,000 சம்பள அதிகரிப்பு வழங்குவதாக அறிவித்திருந்தது.

இந்த தீர்மானத்தின் படி ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களினது சம்பளம் அதிகரிக்கப்படுமா? என இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் விஜித ஹேரத்,

அரச ஊழியர்களுக்கு மட்டடுமல்ல பொதுவாகவே சம்பள அதிகிரப்பொன்று மேற்கொள்ளப்படவேண்டும் என்று நாங்கள் ஏற்றுகொள்கிறோம். புதிய வரவு செலவு திட்டத்தில் இதனை உள்வாங்குவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் புதிய வரவு செலவு திட்டம் புதிய அரசாங்கத்தின் கீழ் முன்வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...