அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

Date:

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் நாட்டின் ட்ரோன்கள், எல்லைதாண்டி அசர்பைஜான் நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அஜர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அசர்பைஜானின் எக்ஸ்க்ளேவில் உள்ள ஒரு விமான நிலையத்தில் ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, “அசர்பைஜான் மீதான இந்தத் தாக்குதல் சர்வதேச விதிமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு எதிரானது. மேலும், இது சர்வதேச அளவில் பதற்றங்களை அதிகரிக்கவும் செய்கிறது.

இந்தத் தாக்குதல் குறித்து ஈரான் இஸ்லாமிய குடியரசு தெளிவுபடுத்தி, விளக்கமளிக்க வேண்டும். எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கத் தேவையான அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்று அசர்பைஜான் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஈரானுக்கு எதிராக பதிலடி நடவடிக்கை எடுக்கும் உரிமையைக் கொண்டுள்ளதாகவும் அஜர்பைஜான் கூறியுள்ளது.

Popular

More like this
Related

புத்தாண்டு என்பது பண்டிகை மட்டுமல்ல, எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு: பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து...

கூட்டுச் செயல்பாடுகள் மூலம் வெளிப்படும் சமூக-கலாசார பிணைப்புடன் இந்த புத்தாண்டு அமைய நல்வாழ்த்துகள்: ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும்...

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...