புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு சலீம் ஆசிரியரை தலைவராகக் கொண்ட புதிய நிர்வாக சபை தெரிவு.

Date:

நேற்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கான புதிய நிர்வாக சபை தெரிவுக்குரிய நிகழ்வுகள் வக்பு சபையினுடைய கண்காணிப்பின் கீழ், வக்பு சபையினுடைய வழிகாட்டலில் ஊர் பிரமுகர்கள் இன்னும் ஏனைய முக்கியஸ்தர்களுடைய பங்களிப்புடன் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.

மஹல்லா வாரியான தெரிவு, பஸாரைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுக்கான தெரிவு, அமைப்புகளைச் சார்ந்தவர்களுக்கான தெரிவு என்று பல கட்டங்களாக நடைபெற்ற இந்தத் தெரிவின் இறுதியில் 21 பேர் கொண்ட நிறைவேற்றுக் குழு யாப்புக்கு அமைவாக தெரிவு செய்யப்பட்டு, அவர்களிலிருந்து ஓய்வுபெற்ற ஆசிரியர் சலீம் அவர்கள்  ஏகமனதாக தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்ட நிலையில் நிகழ்ந்த இந்தத் தெரிவானது எல்லோருக்கும் ஆறுதல் தரக்கூடிய ஒரு தெரிவாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நல்ல சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக பங்களிப்புச் செய்த அனைத்துத் தரப்பினரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

ஊருடைய நலன் கருதி, சமூகத்தினுடைய நலன் கருதி இந்தப் புதிய நிர்வாக சபை மிகச் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாகும்.

Popular

More like this
Related

சலேவின் மருத்துவ அறிக்கை குறித்து நீதிமன்ற தீர்ப்பு

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்காதமை தொடர்பில் கொழும்பு தேசிய...

2027 ஆம் நிதியாண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு!

2027 ஆம் நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடவும், அதனைத்...

சோதனையிலிருந்து சாதனைக்கு..; MDC-யின் சாதனைப் பயணம்1

-எழுதியவர். ஆர்ஸ் ஷித்தீக் கல்வி, மனஉறுதி மற்றும் சமூக முன்னேற்றத்தின் இரண்டு ஆண்டுகள்...

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்; முடங்கியது மாட்டு இறைச்சி வணிகம்.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில், டாங்ரா (Tangra) பகுதியில்...