இரட்டையையாளர்களான மருத்துவத் துறை மாணிவிகள் இருவருக்கு ஐபேட் வழங்கி வைப்பு.

Date:

உலக முஸ்லிம் சமேலனம் (ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி) – இலங்கை அலுவலகத்தின் கீழ் இயங்கி வரும் அனாதைகள் பராமரிப்புப் பிரிவின் இரண்டு மாணவிகள் இரட்டை சகோதரிகளான, இஸ்ரா, இஸ்னா.

இவர்கள் ஓட்டமாவடி சென்ட்ரல் கல்லூரியில் கல்வி பயின்று, உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று, தற்போது மருத்துவத் துறையில் தமது உயர் கல்வியைத் தொடர்வதற்காக மருத்துவக் கல்லூரியில் அனுமதி பெற்றுள்ளனர்.

இவர்களின் கல்வி முன்னேற்றத்தையும் எதிர்கால இலட்சியங்களையும் கருத்திற்கொண்டு, மருத்துவக் கல்வியைத் தொடர்வதற்குத் தேவையான கல்வி வசதிகளை வழங்கும் நோக்கில், இரு மாணவிகளுக்கும் தலா ஒரு iPad வழங்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதன் அடிப்படையில், இன்று 18-09-2026 வெள்ளிக்கிழமை, ஓட்டமாவடி சென்ட்ரல் கல்லூரியில் அதிபர் ஹலீம் இஷாக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வொன்றில், ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி – இலங்கை அலுவலகத்தின் சார்பில் பனிப்பாளர் இம்ரான் ஜமால்தீன் மற்றும் தில்ஷாத் முஹம்மத் ஆகியோர் கலந்து இரு மாணவிகளுக்கும் iPad சாதனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நலன்விரும்பிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த உதவி, மாணவிகளின் மருத்துவக் கல்விக்கு தொழில்நுட்ப ரீதியான ஆதரவை வழங்குவதுடன், அவர்களின் கல்விப் பயணத்தில் மேலும் சிறந்து விளங்குவதற்கான ஊக்கமாகவும் அமையும்.

மருத்துவத் துறையில் இணைந்து கல்வி பயிலும் இந்த இரட்டை சகோதரிகள் தமது கல்வியில் சிறந்து விளங்கி, எதிர்காலத்தில் சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள மருத்துவர்களாகத் திகழ வேண்டும் என ராபிதத்துல் ஆலமில் இஸ்லாமி – இலங்கை அலுவலகம் வாழ்த்துவதுடன், அவர்களின் கல்வி மற்றும் எதிர்காலப் பயணத்திற்கு தேவையான ஆதரவை தொடர்ந்து வழங்குவதற்கான தனது அக்கறையையும் வெளிப்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

‘குர்ஆனின் வழியில் கருணை காட்டுங்கள்’; அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராக அலி சப்ரி குரல்

நபிகள் நாயகத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பதைப் பற்றி பேசும் போதெல்லாம், அவரது கருணை,...

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்கான தீவிர முயற்சி!

சவூதி அரேபியாவில் பணியாற்றும் இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை...

அனோஜன் வழக்கை உன்னிப்பாக அவதானிக்கும் இலங்கை அரசு!

சவூதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான அனோஜன்...

அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை

இன்று (19) முதல் அடுத்த சில நாட்களுக்குத் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில்...