இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் பிரபல கலைஞர் நூர்ஜஹான் மர்சூக் அவர்கள் காலமானார்.

Date:

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) முஸ்லிம் சேவையில் பல தசாப்தங்களாகத் தனது இனிமையான குரலால் இஸ்லாமிய கீதங்களைப் பாடி, ஆயிரக்கணக்கான நேயர்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்ற மூத்த பிரபல கலைஞரும், இசைக் கோகிலமுமான ஹாஜியானி நூர்ஜஹான் மர்சூக் அவர்கள் காலமானார்.

இஸ்லாமிய மெல்லிசைத் துறையில் தனக்கெனத் தனித்துவமான பாணியை உருவாக்கி, வானொலி வழியே தனது தேன் போன்ற குரலால் லட்சக்கணக்கான நேயர்களை ஈர்த்த நூர்ஜஹான் மர்சூக் அவர்களின் மறைவு, இலங்கை இஸ்லாமிய கலை மற்றும் ஊடகத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத பெரு இழப்பாகும்.

மறைந்த அபுபைதா மற்றும் ரஹ்மா பீ ஆகியோரின் அன்பு மகளான நூர்ஜஹான் மர்சூக், மறைந்த அல் ஹாஜ் M. S. M. மர்சூக் அவர்களின் அன்பு மனைவியுமாவார்.

இவர், கொழும்பு 2 மரியம் மகளிர் கல்லூரியின் அதிபர் ரிஹானா மர்சூக் மற்றும் Dialog Axiata நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி ரிஸ்மி மர்சூக் ஆகியோரின் தாயாராவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று (செப்டம்பர் 26, 2026 சனிக்கிழமை) அஸர் தொழுகைக்குப் பின்னர் மாலை 4.00 மணிக்கு தெஹிவளையில் உள்ள அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு, மாலை 5.00 மணிக்கு மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறைவுக்கு ஊடகவியலாளர்கள், இஸ்லாமிய கலை ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஒக்டோபர், நவம்பரில் அதிக மழைவீழ்ச்சி: வெள்ள அபாயத்திற்குத் தயாராகுமாறு வானிலை மையம் எச்சரிக்கை!

இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக...

மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீன் அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவம்!

இலங்கை ஊடகத்துறையிலும் தமிழ் ஊடகக் பரப்பிலும் பல தசாப்தங்களாகத் தனது பங்களிப்பை...

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறை வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம்...

சாதாரண தர மீள் மதிப்பீட்டு முடிவுகள் வெளியீடு

2025 (2026) ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் மீள்...