கொழும்பு நகரில் புதிய மெட்ரோ பஸ் சேவை நாளை முதல் ஆரம்பம்!

Date:

கொழும்பு நகரில் நிலவும் வாகன நெரிசலைக் குறைப்பதோடு, மிகவும் வசதியான மற்றும் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கத்துடன், மேல் மாகாணத்தில் உள்ள 7 மார்க்கங்களின் ஊடாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 104 மெட்ரோ பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

ஜனாதிபதியின் தலைமையில் இந்த புதிய பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாளை (29) முதல் குறித்த சேவைகளை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ பஸ் (Metro Bus) தலைவர் எஸ்.எம்.யூ.பி. திலகவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த புதிய பஸ்கள் கொழும்பை மையமாகக் கொண்ட 7 மார்க்கங்களின் ஊடாக இயக்கப்படுவதுடன், பயணிகள் உரிய மார்க்கங்கள் மற்றும் நேரங்களுக்கு ஏற்ப தமது இலக்குகளை சென்றடையும் வகையில் சேவைகள் செயற்படுத்தப்படவுள்ளன.

“பொதுமக்கள் வசதியாகவும் பாதுகாப்பாகவும் தமது இலக்குகளை சென்றடைவதற்கு உதவுவதற்காகவே நாம் இந்த பஸ் சேவையை அறிமுகப்படுத்துகிறோம்,” என திலகவர்தன குறிப்பிடுகிறார்.

புதிய பஸ்களை அறிமுகப்படுத்துவதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று, கொழும்புக்குள் நுழையும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாகும், குறிப்பாக ஒரே ஒரு பயணி மட்டும் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய காலகட்டத்தில் பலர் அலுவலகங்களுக்குச் செல்வதற்கும் திரும்புவதற்கும் சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவதாகவும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒரு வாகனத்தில் ஒரு நபர் மட்டுமே பயணம் செய்வதாகவும், அதன் விளைவாக நாளாந்தப் போக்குவரத்திற்கு பெருமளவிலான வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் திலகவர்தன சுட்டிக்காட்டினார்.

இந்தப் பஸ்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

2030-க்குள் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகளையும் 8 பில்லியன் டொலர் வருமானத்தையும் இலக்காகக் கொண்டுள்ளது அரசாங்கம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய

இலங்கை சுற்றுலாத்துறையை மேலும் விரிவுபடுத்தி, அதன் பொருளாதார நன்மைகளை உள்ளூர் மக்களுக்கு...

ஐ.நா. பொதுச் சபையில் இன்று தேசிய உரையை நிகழ்த்தவுள்ளார் விஜித்த ஹேரத்!

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், நியூயார்க்கில்...

பல பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை, கண்டி மற்றும்...

ஒக்டோபர், நவம்பரில் அதிக மழைவீழ்ச்சி: வெள்ள அபாயத்திற்குத் தயாராகுமாறு வானிலை மையம் எச்சரிக்கை!

இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக...