‘தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்களுக்கு அனுமதி இல்லை’; நல்லூரில் திலீபன் சிலை அகற்றப்பட்டது குறித்து அமைச்சர் நளிந்த.

Date:

யாழ்ப்பாணம், நல்லூர் திலீபன் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின்  உறுப்பினர் இராசையா பார்த்தீபன் (திலீபன்)  சிலை, நீதிமன்ற உத்தரவிற்கமையவே பொலிஸாரால் அகற்றப்பட்டதாக அரசாங்கப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:

“கடந்த காலங்களில் செப்டம்பர் மாதத்தில் திலீபனின் உருவப்படத்தைப் பயன்படுத்தி நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வந்தபோதிலும், அங்கு சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கையில் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். நாட்டின் சட்டங்களின்படி, தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் கொடிகள், சின்னங்கள் அல்லது அவர்களின் அமைப்பை விளம்பரப்படுத்தும் எந்தவொரு செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சிலையை அகற்றுவதற்கு முன்னர், பொலிஸார் இது தொடர்பான காரணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர். இதுகுறித்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற செயல்முறைகளின் படியே பொலிஸார் இந்நடவடிக்கையை மேற்கொண்டனர்” என்று அவர் விளக்கமளித்தார்.

நாட்டில் அவ்வப்போது இன முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் சுட்டிக்காட்டிய அமைச்சர், இத்தகைய செயல்களை அரசாங்கம் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்றும், சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்றும் வலியுறுத்தினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (27), திலீபனின் 39வது நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவடைந்த மறுநாளில், நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த அச்சிலையை பொலிஸார் அகற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இணையவழி வெறுப்புப் பிரசாரம்: இலங்கையில் சமூக ஊடகங்கள் மூலம் மீண்டும் புதுப்பிக்கப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான அலை!

"அறியாமையால் உருவாகும் தவறான புரிதல் பயத்தை வளர்க்கிறது, பயமே அமைதியின் மிகப்...

ஞானசார தேரரின் சிறைத்தண்டனையை அமுல்படுத்த கோரிக்கை!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு...

பாடசாலைகளுக்கு அதிவேக Fiber இணையத்தள வசதி

நாடு முழுவதிலுமுள்ள 3700 பாடசாலைகளை கேந்திரமாகக் கொண்டு அதிவேக Fiber இணையத்தள...

காசநோய் தடுப்பு மருந்துகளை வழங்கிய இந்தியா

மூன்று தொன் காசாநோய் தடுப்பு மருந்துகளை இந்தியா நன்கொடையாக இலங்கைக்கு வழங்கியுள்ளது....