தென் மற்றும் மேல் மாகாணங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!

Date:

இலங்கைக்கு அருகில் கீழ் வளிமண்டலத்தில் நிலவிய தளம்பல் நிலைமையானது தீவை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக அதன் தாக்கம் படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். இந்தப் பிரதேசங்களின் சில இடங்களில் 75 மில்லிமீட்டர் அளவிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பிறகு ஆங்காங்கே மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு, காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். நாட்டைச் சூழவுள்ள  ஏனைய கடற்பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

காற்றானது தென்மேற்கு திசையிலிருந்தோ அல்லது குறிப்பிட்ட திசையின்றியோ மணிக்கு 25-35 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

காலியிலிருந்து மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

காலியிலிருந்து மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் இக்கடற்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுவதுடன், அக்காலப்பகுதியில் அக்கடற்பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

2025/2026 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியின் இறுதிச் செலுத்தலுக்கான காலக்கெடு...

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

சவூதி அரேபியாவின் மேற்குப் பகுதியில் மாறிவரும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு,...

மக்காவை நோக்கி பாய்ந்த ட்ரோன் தாக்குதல்: சவூதியில் முதன்முறையாக வான்வழி எச்சரிக்கை!

முஸ்லிம்களின் புனித நகரான மக்கா மீது ஹூதிக்கள் ட்ரோன் மற்றும் ஏவுகணை...

சலேவின் மருத்துவ அறிக்கை குறித்து நீதிமன்ற தீர்ப்பு

சுரேஷ் சலேவின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்காதமை தொடர்பில் கொழும்பு தேசிய...