Tuesday, November 24, 2026

பத்தரமுல்லையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்: 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராக SJB போராட்டம்

1 min read · 1 reads

முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சி நடத்தும் எதிர்ப்புப் போராட்டம் காரணமாக, பத்தரமுல்லை பொல்துவ சந்தி மற்றும் தியத உயன ஆகிய பகுதிகளைச் சுற்றிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இப்போராட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டுள்ளதால், அப்பகுதியினூடான வாகனப் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான இரு நாள் நாடாளுமன்ற விவாதம் இன்று தொடங்குகின்ற நிலையில், இதற்கான வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.