ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81 ஆவது அமர்வின் உயர் மட்ட வாரத்திற்கு (UNGA81) மத்தியில், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஈரான் இஸ்லாமியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி செய்யித் அப்பாஸ் அராக்சியைச் (Dr. Seyed Abbas Araghchi) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பின் போது தற்போதைய பிராந்திய மற்றும் சர்வதேச அபிவிருத்திகள் குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் விரிவாகக் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
இக்கலந்துரையாடலின் போது, பதற்றங்களைக் குறைத்து, பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர வழிகள் மூலம் மோதல்களுக்கு அமைதியான முறையில் தீர்வுகாண வேண்டும் என்ற இலங்கையின் நிலைப்பாட்டை அமைச்சர் விஜித ஹேரத் மீண்டும் சுட்டிக்காட்டினார்.
மேலும், பிராந்தியத்தில் கூடிய விரைவில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மீட்டெடுப்பதற்குத் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறும் அவர் ஊக்கமளித்தார்.
