ஷானி மற்றும் ரவியின் அடிப்படை உரிமைகளை தேசபந்து மீறியுள்ளதாக தீர்ப்பு

Date:

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட மூவர் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளின் நிமித்தம் தாம் சட்டத்திற்கு புறம்பாக கைதுசெய்யப்படுவதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன உள்ளிட்டோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையின் பின்னரே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு கோரி ஓய்வுப்பெற்ற முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தன முறைப்பாடொன்றை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டிற்கமைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தற்போதைய பிரதி பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர உள்ளிட்டோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்ததன் ஊடாக அப்போதைய பொலிஸ் மா அதிபராக இருந்த தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட மூவர், மனுதாரர்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதற்கென குறித்த முறைப்பாட்டினை தாக்கல் செய்த ஓய்வுப்பெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தனவினால் தலா 50 ஆயிரம் ரூபாவும், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அப்போதைய பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்துக டி சில்வாவினால் தலா 10 ஆயிரம் ரூபாவும் மனுதாரர்களான ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்னவிற்கு இழப்பீடாக செலுத்த வேண்டுமென தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதிவாதியான ஓய்வுப்பெற்ற முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித சிறிவர்தன குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக மேற்கொண்ட விசாரணைகள் அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்பட்டவை என்றும் இதன் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் மூலம் மனுதாரரர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கஹட்டோவிட்டவில் MEPS & MLSC நடத்தும் முப்பெரும் விழா 2026.

கஹட்டோவிட்ட Muslim Ladies Study Circle  மற்றும் MEPS ஆகியவற்றின் ஏற்பாட்டில்...

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் 23 ஆம் திகதி...

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

நாடு திரும்பும் வழியில் தனது விளையாட்டு உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக, இலங்கை...

இஸ்லாத்தை விமர்சித்த வழக்கு: கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஞானசார தேரர் ஆஜர்!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டதாகத் தாக்கல் செய்யப்பட்ட...