ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக சட்டத்தரணி ஹபீப் ரிபான் இன்றைய சபை அமர்வின் போது சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
இன்று காலை சபை அமர்வுகள் ஆரம்பமான நிலையில் சபாநாயகர் முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்தார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட எம்.எஸ். அப்துல் வாஸித் அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
இதனையடுத்து ஏற்ப்பட்ட வெற்றிடத்திற்கே சட்டத்தரணி ஹபீப் ரிஃபான் நியமிக்கப்பட்டுள்ளார்.
