ரிச்சர்ட் மோடீல் (Richard Bulliet / Richard Mortel) என்னும் பெயருடைய அமெரிக்க அறிஞர், 1973 ஆம் ஆண்டில் அல்குர்ஆனுடைய அத்தியாயம் ஒன்றை ஆய்வு செய்ததன் பின்னர் இஸ்லாத்தைத் தழுவிய ஒருவர்.
இஸ்லாமிய வரலாறு சம்பந்தமான ஆய்வுத் துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்த ஒருவர் என்ற வகையிலே, இவருக்கு சவூதி அரேபியா குடியுரிமை வழங்கியது.
ஆங்கில மொழியில் வெளிவருகின்ற தாரா (Darah) என்ற சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகக் கடமையாற்றுகின்ற இவர், இஸ்லாமிய வரலாறு சம்பந்தமான துறையில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவராகவும் கருதப்படுகிறார்.
கலாநிதி ரிச்சர்ட் மோடீல்—அமெரிக்கரான கலாநிதி ரிச்சர்ட் மோடீல் எந்த அளவு அரபு மொழியில் பாண்டித்தியம் பெற்றவராக இருக்கிறார் என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்.
அரபு மொழியின் பிரம்மாண்டம், அதன் ஆழம் மற்றும் மகத்துவத்தைக் குறித்து அமெரிக்க அறிஞரான கலாநிதி ரிச்சர்ட் மோடீல் (Dr. Richard Mortel) நிகழ்த்திய உரை, அறியாமையில் இருக்கும் நவீனத்துவவாதிகளுக்கு (Modernists) பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
அவர் தனது உரையில், “அரபு மொழி மற்ற எந்த மொழியையும் விட மிகவும் சிறந்தது. இதில் விவாதிப்பதற்கு எதுவுமில்லை. வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவுக்கு கடலெனக் விரிந்த வளங்களும், ஆழமான கருத்துகளும் அரபு மொழியில் நிறைந்துள்ளன. எனவே, அரேபியர்களே! விண்வெளியின் மொழியாகவும், இறைவனின் தூது உரையின் (வஹி) மொழியாகவும் திகழும் இந்த மொழியைக் குறித்து நீங்கள் பெருமை கொள்ளுங்கள்!” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றுத் துறையில் பெரும் நிபுணத்துவம் பெற்ற இவர்,சவூதியின் பிரபல வரலாற்றுச் சஞ்சிகையான ‘அத்-தாரா’ (Darah) இதழின் ஆங்கிலப் பதிப்பின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
அரபு மொழியில் இவர் கொண்டுள்ள பாண்டித்தியமும், அதன் சிறப்பு குறித்த இவரின் கருத்துக்களும் சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்று வருகின்றன.
