பிரபல இஸ்லாமிய அறிஞரும் சிந்தனையாளருமான கலாநிதி அப்துல்கரீம் பக்கார் அவர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பு.

Date:

சமகால இஸ்லாமிய உலகின் சிந்தனையாளர்களில் ஒருவரும் இஸ்லாமிய அறிஞருமான கலாநிதி அப்துல்கரீம் பக்கார் அவர்களை, துருக்கியின் இஸ்தான்பூலில் உள்ள அவருடைய இல்லத்துக்கு அருகில் அமைந்துள்ள பள்ளிவாசலில் இரண்டு தினங்களுக்கு முன்னால் சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தது.

தனது ஏராளமான நூல்கள் மூலமாகவும் உரைகள் மூலமாகவும் மாநாடுகள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாகவும் இஸ்லாமிய உலகில் பல்வேறு பணிகளை ஆற்றிவருகின்ற கலாநிதி அப்துல்கரீம் பக்கார் அவர்கள், சில வருடங்களாக அறிமுகமாகி இருந்தாலும் நேரடியாக சந்திக்கின்ற வாய்ப்பு இந்த முறைதான் இஸ்தான்பூலில் எனக்கு கிடைத்தது.

ஏற்கனவே அவரைச் சந்திப்பதற்காக அழைப்புக்கள் கிடைத்திருந்தாலும், என்னுடைய வேறு அலுவல்கள் காரணமாக அவரைச் சந்திக்கின்ற வாய்ப்பு கிடைக்காத நிலையிலே, என்னுடைய இலங்கை திரும்புவதற்கு முந்திய நாளாகிய செப்டம்பர் 29ஆம் திகதி ஒரு மாலை வேளையில் மஃரிப் தொழுகையின் பின்னர் அன்னாருடைய அழைப்பின் பேரில் மீண்டும் அவரைப் பள்ளிவாசலில் சந்தித்தேன்.

மிகவும் அழகான தோற்றத்துடன் புன்னகை நிரம்பிய முகத்தோடு எனது பெயரைச் சொல்லி சலாம் கூறி அரவணைத்துக் கொண்ட அவர், என்னோடு சென்ற துருக்கியில் வசிக்கின்ற எனது மகன் அப்துர் ரஹ்மானையும் சேர்த்து அரவணைத்து உட்கார வைத்து ஒரு குறுகிய நேரம் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இலங்கையைப் பற்றி, இலங்கையின் நிலைகளைப் பற்றியெல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டதன் பின்னர், சிரியாவைப் பற்றியும், சிரியாவுக்கும் துருக்கிக்கும் இடையிலான உறவுகள் பற்றியும், இளைஞர்களை தீவிரவாத சிந்தனையில் இருந்து பாதுகாப்பதற்காக உழைக்க வேண்டியதன் தேவையைப் பற்றியும், சமூக ஊடகங்கள் வாயிலாக மிகச் சிறந்த கருத்து மாற்றங்களை உருவாக்க முடியுமாக இருப்பது பற்றியும் அந்த குறுகிய நேரத்திலே கலாநிதி அப்துல்கரீம் பக்கார் அவர்களோடு கலந்துரையாடக் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

சந்திப்பின் முடிவிலே அன்னார் எழுதிய ‘அத்தர்பியா அல்-இஜ்திமாயிய்யா’ (சமூகவியல் துறையில் பயிற்றுவித்தல்) என்ற அன்னாருடைய மிகச் சிறந்த நூலின் பிரதி ஒன்றையும் எனக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

மிகக் குறுகிய நேரமே இச்சந்திப்பு நடைபெற்றபோதிலும், மிகவும் பயனுள்ள கருத்துக்களை பரிமாறிக் கொள்ளக் கிடைத்த மகிழ்ச்சியோடு விடைபெற்றேன்.

ஆக்கம்- அஷ்ஷேக் அப்துல் முஜீப் சாலிஹ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

வடமத்திய மாகாண பாடசாலை அதிபர்களுக்கான தேசிய ஷூரா சபையின் திறன் விருத்தி நிகழ்ச்சி

வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த பாடசாலை அதிபர்களுக்கான திறன் விருத்தி நிகழ்ச்சியை தேசிய ஷூரா  செப்டம்பர் 30 ஆம் திகதி அனுராதபுரம் CTC வரவேற்பு மண்டபத்தில் நடாத்தியது. கல்வி அமைச்சின் புதிய கல்விச் சீர்திருத்தங்களுடன் தொடர்புடைய விடயங்களை பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான பாடசாலை நிர்வாகத்தின் திறனை மேம்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். பாடசாலை...

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டிய சொத்துக்கள் முடக்கம்

போதைப்பொருள் வர்த்தகம் ஊடாக ஈட்டப்பட்ட 44.5 மில்லியன் ரூபாவிற்கும் அதிக சொத்துக்களை...

முஸ்லிம்கள் போன்று போலி அடையாளத்துடன் மத வெறுப்பைப் பரப்பிய 21 வயது இளைஞன் கைது!

இலங்கையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி, சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே...

காசா போரில் கொல்லப்பட்ட பாலஸ்தீனப் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 263 ஆக உயர்ந்தது.

காசா பகுதியில் 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில்,...