போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டிய சொத்துக்கள் முடக்கம்

Date:

போதைப்பொருள் வர்த்தகம் ஊடாக ஈட்டப்பட்ட 44.5 மில்லியன் ரூபாவிற்கும் அதிக சொத்துக்களை முடக்குவதற்கு பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த இரு சந்தேக நபர்களுக்கு இந்த சொத்துக்கள் உரித்துடையதாக காணப்பட்டுள்ளன.

சட்டவிரோத சொத்து விசாரணை பிரிவு நடத்திய விசாரணைகள் ஊடாக சந்தேக நபர்களான தம்பதியினர் போதைப்பொருள் வர்த்தகம் ஊடாக இந்த சொத்துக்களை ஈட்டியுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த சொத்துக்களில் கட்டுனேரிய பகுதியில் 24.8 பேர்ச்சர்ஸ் காணியொன்றும் இருந்துள்ளது. அதன் பெறுமதி 9.5 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த காணி குறித்த பெண்ணின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இரு மாடிகளைக் கொண்ட வீடொன்றும் முடக்கப்பட்டுள்ளது.

இதன் பெறுமதி 35 மில்லியன் ரூபா என தெரியவந்துள்ளது. நிதிச் சலவை சட்டத்தின் கீழ் 14 நாட்களுக்கு இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

முஸ்லிம்கள் போன்று போலி அடையாளத்துடன் மத வெறுப்பைப் பரப்பிய 21 வயது இளைஞன் கைது!

இலங்கையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி, சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே...

காசா போரில் கொல்லப்பட்ட பாலஸ்தீனப் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 263 ஆக உயர்ந்தது.

காசா பகுதியில் 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில்,...

ரஷ்யாவில் நடைபெற்ற கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியை நிறைவு செய்து இலங்கை இராணுவ அணி நாடு திரும்பியது!

ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் ரஷ்ய ஆயுதப்படைகளுடன் இணைந்து நடைபெற்ற கூட்டு பயங்கரவாத...