அன்டிகுவா சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி அமரசூரிய!
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று திங்கட்கிழமை அன்டிகுவா மற்றும் பர்புடா நாட்டை சென்றடைந்துள்ளார்.
அன்டிகுவா மற்றும் பர்புடாவின் சுகாதாரம், நல்வாழ்வு, சுற்றாடல் மற்றும் அரச சேவைகள் அலுவல்கள் அமைச்சர் மைக்கேல் ஜோசப் பிரதமரை வரவேற்றதுடன், விமான நிலையத்தில் பிரதமருடன் சிநேகபூர்வமான கலந்துரையாடலொன்றையும் நடத்தினார்.
இவ்விஜயத்தில் பிரதமர், பொதுநலவாய மகளிர் மன்றத்திலும் கலந்துகொள்ளவுள்ளார்.
இதேவேளை, 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 முதல் 17ஆம் திகதி வரை 23ஆவது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு இலங்கை நடைபெற்றிருந்தது. அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாநாட்டைத் தலைமை தாங்கி நடத்தியிருந்தார்.