Wednesday, November 4, 2026

இலங்கையில் கடந்த ஆண்டு முதல் 11,000-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கைது

1 min read · 5 reads
இலங்கையில் கடந்த 2025 அக்டோபர் 30 முதல் இதுவரை 233 சிறுமிகள் உட்பட 11,131 சிறுவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஸ்பி எஃப்.யூ. வூட்லர் (ASP F. U. Wootler) தொலக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
பாடசாலைகள் மற்றும் டியூஷன் வகுப்புகள் நடைபெறும் பகுதிகளைக் குறிவைத்து போதைப்பொருள் விநியோகம் செய்யப்படுவதாகத் தொடர் புகார்கள் வந்துள்ள நிலையில், அதுகுறித்து தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஐஸ்கிரீம், மிட்டாய் (Cotton Candy) மற்றும் Sarawita போன்ற சிறுவர்கள் விரும்பி உண்ணும் உணவுப் பொருட்களுக்குள் போதைப்பொருட்கள் மறைத்து விற்கப்படுவதாகப் புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
சிறுவர்கள் போதைப்பொருள் பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தடுக்க பெற்றோர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
குழந்தைகளின் உணவுப் பழக்கவழக்கங்கள், நடத்தை, அவர்கள் பேசும் விதம் மற்றும் நண்பர்கள் வட்டம் (Social Circles) ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களைப் பெற்றோர் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். இந்த மாற்றங்கள் அவர்கள் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் சிக்கியிருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று அவர் எச்சரித்துள்ளார்.