‘புதிய அமைச்சரவையில் அமைச்சுக்களை ஏற்க போவதில்லை ‘: பந்துல குணவர்த்தன

Date:

எதிர்வரும் சில நாட்களில் நியமிக்கப்படவுள்ள அமைச்சரவைப் பதவியை ஏற்கப் போவதில்லை என முன்னாள் வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண இளைஞர்கள் அடங்கிய அமைச்சரவையொன்று நியமிக்கப்பட வேண்டுமெனவும், அவர்களுக்கு இடமளிக்கும் வகையில், அமைச்சரவையின் பொறுப்பை ஏற்கப் போவதில்லை எனவும் அமைச்சர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய காலத்திற்கு சுமார் 15 பேர் கொண்ட அமைச்சரவையை நியமிக்க முன்வந்துள்ள அமைச்சர், நெருக்கடிக்கு தீர்வு கிடைத்தவுடன் மற்றுமொரு அமைச்சரவையை நியமிக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளார்.

மேலும், குறுகிய காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பல மாற்றங்களையும்.பந்துல குணவர்தன தனது கடிதத்தில் ஜனாதிபதிக்கு பரிந்துரைத்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...