அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் செல்ல முற்பட்ட 77 பேர் கைது!

Date:

மட்டக்களப்பு, களுவங்கேணி கடற்கரையில் இருந்து அவுஸ்ரோலியாவுக்கு இயந்திர படகில் சட்விரோதமாக பயணித்த 77 பேரை இன்று (11) அதிகாலை கைது செய்துள்ளதாகவும் இதில் பெண் ஒருவர் உட்பட 17 பேரை ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் ஏனைய 60 பேரை படகுடன் திருகோணமலை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய சம்பவதினமான இன்று அதிகாலை 2 மணி அளவில் மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கடல்பகுதியில் பயணித்த இயந்திரப்படகை கடற்படையின் படகுகள் சுற்றிவழைத்து கைப்பற்றினர்.

இதில் சட்விரோத குடியேற்றக்காரர்கள் 60 பேரை கைது செய்ததுடன் குறித்த சட்டவிரோத படகில் ஏறுவதற்கு களுவங்கேணி கடற்கரையில் வான் ஒன்றில் காத்திருந்த 17 பேரை கடற்படை புலனாய்வு பிரிவினர் பொலிஸாருடன் இணைந்து சுற்றிவழைத்து கைது செய்ததை அடுத்து 77 பேரையும் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட 60 பேரையும் படகையும் திருகோணமலை கடற்படை முகாமிற்கு இழுத்துச் சென்றுள்ளதுடன் களுவங்கேணி கடற்கரையில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உட்பட 17 பேரையும் 14 அரை இலட்சம் ரூபாவையும் வான் ஒன்றையும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன், இதில் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்வர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

ஊடகத்துறை வளர்சிக்காக சுயாதீன ஊடக ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை

இலங்கைப் பத்திரிகைப் பேரவைக்கு பதிலாக சுயாதீன ஊடக ஆணைக்குழுவொன்றை அமைக்கும் யோசனைக்கு...

கட்டாரிலுள்ள அனைத்து இலங்கையர்களும் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள்

கட்டார் இராச்சியத்திலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு வலயத்தில் நிலவும்...

பிலிப்பைன்ஸ் சென்றார் பிரதமர்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் அழைப்பிற்கிணங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்றிரவு...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை மாவட்டங்களிலும்...