அதிக வருமானம் பெறுபவர்களுக்கு வேறு முறையில் தண்ணீர் கட்டணத்தை அறவிட தீர்மானம்!

Date:

அதிகரிக்கப்படுகின்ற நீர் கட்டணத்தை, வருவாய் திறனுக்கு ஏற்பட அறவிடுவதற்கு புதிய திட்டத்தை தயாரிப்பதில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

அண்மையில் நீர் கட்டணம் அதிகரிப்பு தொடர்பாக யோசனையை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சரைவையில் முன்வைத்தார்.
இந்த யோசனைக்கு தற்போது அனுமதி கிடைக்கப்பபெற்றுள்ளதுடன் அதனை விரைவாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அதிக வருமானம் பெறும் தரப்பினருக்கும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கும் ஒரு அலகு நீருக்கு ஒரே அளவான கட்டணத்தை செலுத்துகின்றனர்.
இம்முறைமைக்கு பதிலாக, குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு சலுகைகள் வழங்கவும், அதிக நீரை பயன்படுத்தும் அதிக வருமானம் பெறுபவர்களுக்கு வேறு முறையில் கட்டணத்தை அறவிடவும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.
இதற்கமைய வீட்டுப்பாவனைக்கான நீர்வசதியை மாத்திரம் பெறுபவர்களின் புதிய நீர்கட்டணங்களின் படி, குறைந்தளவிலேயே கட்டணம் அதிகரிக்கரிக்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...