ஓய்வு வயதெல்லை திருத்தப்பட்ட சேவைகளுக்கு பொருந்தாது: பொது நிர்வாக அமைச்சு!

Date:

அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை 60ஆக குறைக்கப்பட்ட போதிலும், கட்டாய ஓய்வு வயதெல்லை திருத்தப்பட்ட சேவைகளுக்கு பொருந்தாது என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில், அமைச்சரவை அனுமதியுடன் சுற்றறிக்கை வெளியிடப்படும் என அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 6ஆம் திகதிய அரச நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம், அனைத்து அரச ஊழியர்களினதும் கட்டாய ஓய்வு வயதெல்லை 65 ஆக அதிகரிக்கப்பட்டது.

அதற்கு முன்னர், சேவை அவசியத்தன்மை அடிப்படையில் சில விசேட சேவைகளுக்கு கட்டாய ஓய்வு வயதெல்லை, ஓய்வூதிய யாப்பில் நிர்ணயிக்கப்பட்ட கட்டாய ஓய்வு வயதெல்லை 60 வயதை விடவும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

புதிய இடைக்கால பாதீட்டில், அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதெல்லை 60 ஆக திருத்தப்பட்டது.

அது, அனைத்து அரச ஊழியர்களினதும் கட்டாய ஓய்வு வயதெல்லை, 65 ஆக நிர்ணயிக்கப்படுவதற்கு முன்னர், கட்டாய ஓய்வு வயதெல்லை திருத்தப்பட்ட சேவைகளுக்கு பொருந்தாதவாறு நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அனுமதியுடன் சுற்றறிக்கை அறிவித்தல் வெளியிடப்பட உள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...