பாகிஸ்தானில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேயிலையை நன்கொடையாக வழங்கியது இலங்கை அரசு!

Date:

பாகிஸ்தானில் கடந்த வாரங்களில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசாங்கம் சிலோன் தேயிலையை நன்கொடையாக வழங்கியுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, பாக்கிஸ்தான் உயர்ஸ்தானிகர் உமர் பாரூக் புர்கியிடம், வெளிவிவகார அமைச்சில் வைத்து தேயிலை தொகையை கையளித்தார்.

இந்த சந்திப்பின் போது, ​​வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அமைச்சர் அனுதாபங்களை தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் ஆதரவையும் ஒற்றுமையையும் அமைச்சர் சப்ரி தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் மூத்த அதிகாரிகளும் உடனிருந்தனர்.

Popular

More like this
Related

மாணவர்களுக்கான காலணி வவுச்சர்கள் : செல்லுபடி காலம் நீடிப்பு!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி...

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டச் சீர்திருத்தங்களை முன்னெடுக்க அனைத்துத் தரப்பினரும் ஒருமித்துச் செயற்பட வேண்டும்!

-என்.எம்.எம்.மிஃப்லி முன்னாள் இறைவரி திணைக்கள ஆணையாளர்.       முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டமூலம்: ஆண் பெண்...

பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன்...

பெண்ணியம் பேசிய அதிகாரியின் மறுபக்கம்: ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணங்களில் சிக்கிய ஐக்கிய அரபு அமீரக அதிகாரி ஹிந்த் அல் ஒவைஸ்.

சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein)...