சவூதி அரேபிய கழகத்தில் இணைகிறார் நெய்மார்!

Date:

கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியாத் மாஹரிஸ், செடியோ மானே, பென்சிமா உள்ளிட்ட உலகின் முன்னணி வீரர்களை அதிகவிலை கொடுத்து சவூதி  அரேபியாவின் கால்பந்து கழகங்கள் தன் பக்கம் ஈர்த்துள்ளன.

இந்த வரிசையில் தற்போது கால்பந்து உலகில் நட்சத்திர வீரரும் பிரேசில் கால்பந்து அணி வீரருமான நெய்மார் இணைந்துள்ளார்.

அதற்கமைய, நெய்மார் டீ சில்வா சாண்டோஸ் சவூதி அரேபியாவின் முன்னணி கழகமான , அல்-ஹிலாலுடன் 129.4 மில்லியன் பெறுமதியான இரண்டு வருட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.

31 வயதான நெய்மார், பிரேசில் அணியின் முன்னணி வீரராவார். இவர் முன்னாள் கால்பந்தாட்ட வீரரான Pele வின் சாதனைக்கு நிகராக பிரேஸிலுக்காக 77 கோல்களை பதிவு செய்துள்ளார்.

பல்வேறு கால்பந்தாட்ட கழகங்களில் விளையாடியுள்ள நெய்மார் 257 கோல்களை பதிவு செய்துள்ளார்.

 

Popular

More like this
Related

தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை (National Oral Health...

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது...

சர்வதேச மோதல்களின் தாக்கம்: சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதை...

சில மாவட்டங்களுக்கு மழையுடனான வானிலை!

வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் அவ்வப்போது சிறிதளவு மழை...