வாகனங்களை கொள்வனவு செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Date:

வாகனங்களை வாங்குகின்றவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து அவற்றை உள்நாட்டில் ஒழுங்கமைத்து தரமற்ற வாகனங்கள் போலி ஆவணங்களுடன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

அவ்வாறு விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த இரண்டு ஜீப் வண்டிகள் குருநாகலை பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டன.

வர்த்தகர் ஒருவர் இந்த வாகனங்களை கொள்கலன் ஒன்றில் இலங்கைக்கு இறக்குமதி செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வாகனங்களுக்கான அனைத்து ஆவணங்களுமே போலியானவை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...