சந்தையில் சீனி விலை அதிகரிப்பு!

Date:

சீனிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை அடுத்து சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

அத்துடன், சில விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் சீனியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தையில் தற்போது வெள்ளை சீனி கிலோ ஒன்று 320 முதல் 350 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

சீனிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை அடுத்து சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

அத்துடன், சில விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் சீனியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தையில் தற்போது வெள்ளை சீனி கிலோ ஒன்று 320 முதல் 350 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி மேலும் அதிகரிக்கப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் குறித்த வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, 25 ரூபாவாக காணப்பட்ட இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான விசேட பண்ட வரி 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.

வரி அதிகரிப்புக்குப் பின்னர் சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் விவகார அதிகாரசபயினால் அண்மையில் வெளியிடப்பட்டது.

இதன்படி, பொதி செய்யப்படாத வெள்ளை சீனி கிலோ ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட வெள்ளை சீனி கிலோ ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 295 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டது.

அத்துடன், பொதி செய்யப்படாத சிவப்பு சீனி கிலோ ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 330 ரூபாவாகவும், பொதி செய்யப்பட்ட சிவப்பு சீனி கிலோ ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 350 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இருப்பினும், சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டதையடுத்து, சந்தையில் சீனியின் விலை மேலும் அதிகரித்துள்ளதுடன், சீனிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிகின்றனர்.

Popular

More like this
Related

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...