admin
-
கட்சி செயலாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு!
2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக. பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி செயலாளர்கள் இன்று (11) தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலுக்கு தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!
இன்றும்(11) நாடளாவிய ரீதியில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, 02 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
-
இன்றைய வானிலை அறிவிப்பு!
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மழை நிலைமை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையில் இருந்து வீசக் கூடுவதுடன்…
-
பாகிஸ்தான் வெள்ளப்பெருக்கு: அமெரிக்கா 100 மில்லியன் டொலர் நிதியுதவி!
பாகிஸ்தானில் பருவகால மழை பாதிப்புகளால் கடந்த ஆண்டில் அந்நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சாலைகளும், பாலங்களும் முறையே துண்டிக்கப்பட்டும், நீரில் அடித்துச் செல்லப்பட்டன. நாட்டில் 3.3 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டனர். பாகிஸ்தானில் வெள்ள பாதிப்பால் 1,700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கானோர்…
-
ATM கொள்ளை : மூன்று வெளிநாட்டவர்கள், பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட ஐவர் கைது!
வங்கி ATM கொள்ளையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பொலிஸ் உயர் அதிகாரி உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் மீகஹதென்ன பொலிஸ் நிலைய அதிகாரி, 02 பல்கேரியர்கள், கனேடிய பிரஜை ஒருவர் மற்றும் இலங்கையர் உள்ளடங்குவதாக பொலிஸார்…
-
முட்டை விலையை 5 ரூபாவினால் குறைக்க தீர்மானம்!
முட்டைகளின் மொத்த விலையை 5 ரூபாவால் குறைக்க அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளது. இதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை முதல் முட்டைகளின் மொத்த விலை 45 ரூபாவாக நிர்ணயிக்கப்படவுள்ளது.
-
இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!
இன்றும்(10) நாடளாவிய ரீதியில் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில், மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, 02 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
-
இன்றைய வானிலை அறிவிப்பு!
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும்…
-
பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல்!
அண்மைய எரிபொருள் விலை திருத்தத்தை அடுத்து பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் தனியார் பேரூந்து சங்கங்களுக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. தொடர்ச்சியாக பல மாதங்களாக எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும்,…
-
மொனராகலை உயர் பொலிஸ் அதிகாரி STF அதிகாரிகளினால் அதிரடி கைது!
மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 350 கஞ்சா செடிகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டில் நேற்றிரவு…