admin
-
BREAKING NEWS | நிறைவேறியது அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலம்
22 ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும் எதிராக 1 வாக்கும் கிடைத்தன. இதனால்178 மேலதிக வாக்குகளால் 22 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
-
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை தவிர வேறு வழியில்லை!
தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை தவிர வேறு வழியில்லை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். வரி திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்புடன் இணைந்த பிற சீர்திருத்தங்கள் என்பன நிதியுதவி உறுதிப்படுத்தல் செயல்முறையின்…
-
புதிய வரிக்கொள்கை காரணமாக தகவல் தொழிநுட்ப துறை வீழ்ச்சி!
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிக் கொள்கை காரணமாக தகவல் தொழில்நுட்பத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை கணிணி குழுமத்தின் தலைவர் தமித் ஹெட்டிஹோ இதனைத் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத்துறையைச் சார்ந்த பல நிபுணர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
தீபாவளிக்காக முற்பணம் ரூபா 15,000 ஆயிரம் தருவதாக ஏமாற்றம்! தொழிலாளர்கள் கவனஈர்ப்பு போராட்டத்தில்!
தீபாவளிக்காக முற்பணம் ரூபா 15,000 ஆயிரம் தருவதாக பெருந்தோட்ட கம்பனிகள் அறிவித்திருந்த போதிலும் அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு உட்பட்ட அக்கரப்பத்தனை வேவர்லி, மோனிங்டன், போட்மோர், ஆடலி உள்ளிட்ட தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு 5000 ரூபாய் அல்லது பத்தாயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் முற்பணம் தருவதாக…
-
22வது திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கொடுப்பு இன்று!
அரசியலமைப்பின் 22வது திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கொடுப்பு இன்று பிற்பகல் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் இன்றைய தினம் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. அது தொடர்பில் நேற்றைய தினமும் விவாதம் இடம்பெற்றது. அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தச்சட்டமூலத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்…
-
இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!
இன்று இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
-
இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு!
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில்100 மி.மீ அளவான பலத்த…
-
புனர்வாழ்வு சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது: உச்ச நீதிமன்றம்!
புனர்வாழ்வு சட்டமூலம் அரசியலமைப்பின் 112 (1) வது பிரிவுக்கு முற்றிலும் முரணானது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (20) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு பணியக சட்டமூல வரைவு கடந்த செப்டம்பர் 23ஆம்…
-
கோதுமை மா விலை குறைப்பு!
கொழும்பு – புறக்கோட்டை சந்தையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் இதனை அறிவித்துள்ளது. இதன்படி, 290 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 265 ரூபாவாக…
-
22 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் இன்றும் நாளையும் விவாதம்!
அரசியல் அமைப்பில் 22 ஆவது திருத்தச் சட்டம் குறித்து இன்றும் நாளையும் பாராளுமன்றில் விவாதம் நடாத்தப்பட உள்ளது. இந்த திருத்தச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இவ்வாறு நடைபெறவுள்ளது. இன்றைய தினம் முற்பகல் 10.30 மணி முதல் மாலை 5.00 மணிவரையில் இந்த…