-
மீண்டும் காசா மக்களுக்காக குனூத் ஓதுமாறு ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்..!
பலஸ்தீன் மற்றும் காசா மக்களுக்காக துஆ பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் குறிப்பாக பஜ்ரு, வித்ருத் தொழுகைகளின் குனூத் ஓதுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை முஸ்லிம்களிடமும் மஸ்ஜித் இமாம்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது. கடந்த சில தினங்களாக பலஸ்தீனில் நடைபெற்றுவரும் தாக்குதல் தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமா அறிக்கையொன்றை…
-
கலேவல பிரதேச சபை வேட்பாளராக களமிறங்கும் ஜேர்மனி நாட்டு பெண்
மாத்தளை மாவட்டத்திலுள்ள கலேவல பிரதேச சபைக்கு ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் சுயேச்சைக் குழுவின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட உள்ளார். இதற்காக, அவர் தேர்தல் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். அந்தப் பெண் இலங்கை குடியுரிமையை பெற்றுள்ளதாகவும், உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து சட்டத்துவ நிபந்தனைகளையும்…
-
உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் பணிகள் இன்றுடன் நிறைவு!
எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் (20) நிறைவடையவுள்ளது. இன்று நண்பகல் 12.00 மணிக்கு பின்னர் வேட்புமனுக்கள் எந்தக் காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை நிறைவடைந்ததும் இன்று நண்பகல்…
-
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலை!
பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 20 நாட்களின் பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை…
-
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன்…
-
பலஸ்தீன மக்களின் துணிச்சல் மேலோங்குகிறது; இஸ்ரேலிய அரசுக்கு மனிதநேயம் ஒரு பொருட்டல்ல;பிரியங்கா காந்தி விமர்சனம்!
இஸ்ரேலிய அரசால் 400 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டிருப்பது மனிதநேயம் ஒரு பொருட்டல்ல என்பதைக் காட்டுகிறது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளரும், வயநாடு எம்.பியுமான பிரியங்கா காந்தி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இஸ்ரேலிய…
-
சொர்க்கத்தில் தேனிலவு கொண்டாட சென்றார்களா? : இஸ்ரேலிய தாக்குதலில் பலியான அல்குட்ஸ் பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு ஹம்சா மற்றும் அவரது மனைவி
படத்தில் காட்டப்பட்டுள்ள இந்த இருவரும் தற்போது உயிருடன் இல்லை. நேற்று காசாவில் மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலின் மோசமான தாக்குதல்களினால் இவ்விருவரும் குடும்பத்தாருடன் முற்றாக படுகொலை செய்யப்பட்டனர். இந்த வாலிபர் வேறு யாருமில்லை அல்-குட்ஸ் படைப்பிரிவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அபு ஹம்சா (25). அவருடைய வீட்டை…
-
காசாவில் 413 பேர் கொன்று குவிப்பு: இனி இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிராக அதிக பலத்துடன் செயல்படும்; இஸ்ரேல் பிரதமர்
நேற்று காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இதுவரையில் 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 413 பேரின் உடல்கள் கிடைத்துள்ளதாகவும் பல உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது என்றும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் பிரதமர்…
-
தேசபந்து தென்னக்கோனுக்கு நாளை வரை விளக்கமறியல்!
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை நாளை வியாழக்கிழமை (20) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (19) உத்தரவிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள…
-
முஸ்லிம் ஊடகவியலாளர்களை அழைத்து, அரசாங்க தகவல் திணைக்களம் நடத்திய இப்தார் நிகழ்வு!
இஸ்லாமியர்களின் புனித நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வு நேற்று (18) அரசாங்க தகவல் திணைக்களத்தில் சிறப்பாக நடைபெற்றது. அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக…