-
நாட்டில் நிலவும் மோசமான வானிலை: முன்பள்ளி விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக வடமத்திய மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட 1,480 முன்பள்ளிகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று (27) முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மாகாண ஆரம்பக் குழந்தைப் பருவ அதிகார சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர்…
-
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்கள் இருவரின் சடலங்கள் மீட்பு..!
வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில் தற்போது வரை இரண்டு மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம், விசேட அதிரடிப்படை பங்கேற்றுள்ளதுடன் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
-
சீரற்ற காலநிலை: யாழில் 2634 குடும்பங்களைச் சேர்ந்த 9404 பேர் பாதிப்பு..!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் 2634 குடும்பங்களைச் சேர்ந்த 9404 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 48 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். சங்கானை பிரதேச செயலக பிரிவில் 573 குடும்பங்களைச் சேர்ந்த 2335…
-
மத்திய மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்புச் செயலாளராக அஷ்ஷெய்க் தாரிக் அலி நியமனம்
மத்திய மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்புச் செயலாளராக அஷ்ஷெய்க் தாரிக் அலி (நளீமி) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஆசிரியரும், சமூக சேவையாளருமான தாரிக் அலி அவர்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மற்றும் அரபு ஆகிய மொழிகளுக்கான சிரேஷ்ட மொழிபெயர்ப்பாளருமாவார். இந்நியமனம் கடந்த 19ஆம் திகதி மத்திய…
-
நாட்டில் சீரற்ற வானிலை: தமிழ் பேசும் மக்களுக்கென பிரத்தியேக தொலைப்பேசி இலக்கம்!
நாட்டில் சீரற்ற வானிலை நிலவி வருவதால் தொடர்ச்சியாக ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள், இடர்ப்பாடுகள் தொடர்பில் அறிவிக்க தமிழ் பேசும் மக்களுக்கென பிரத்தியேகமாக அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ் பேசும் மக்களுக்கள் 107 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டு அனர்த்தம் தொடர்பில்…
-
ஐபிஎல் ஏலம்: விலைக்கு செல்லாத வீரரை கேப்டனாக்கும் அதிரடி முடிவில் கொல்கத்தா!
புதிய IPL 2024 சீசனின் மேகா ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ரஹானே, முதல் சுற்றில் தேர்வு செய்யப்படாத நிலையில், இரண்டாவது சுற்றில் 2 கோடி ரூபாயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் சேர்ந்தார். இந்த மாற்றத்தின் பிறகு,…
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புத்தளம் மக்களுக்கான நிவாரணம்: ACJU புத்தளம் நகரக் கிளை தலைவரின் வேண்டுகோள்
புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சவால்மிக்க சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை தலைவர் நிவாரண உதவிகளுக்காக மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்கி கணக்கு இலக்கம்…
-
இன்று சூறாவளியாக வலுவடையும் தாழமுக்கம்!
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலையானது திருகோணமலைக்கு தென்கிழக்கே 190 கிலோ மீற்றர் தொலைவில் நேற்றிரவு இரவு 11.30 மணியளவில் நிலைகொண்டிருந்தது. இது இலங்கையின் கிழக்குக் கடற்கரைக்கு அருகில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று (27) சூறாவளியாக மேலும் வலுவடையும்.…
-
உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைப்பு
நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 3 நாட்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்குத் தீர்மானித்துள்ளது. குறித்த அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர விடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சைகள்…
-
நாட்டில் சீரற்ற காலநிலை: வவுனியா மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு கோரிக்கை!
சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குமாறு இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவர் எஸ்.எம.சிப்லி மற்றும் செயலாளர் யு.உபைதுல்லா ஆகியோர் இணைந்து குறித்த கோரிக்கை கடிதத்தை வவுனியா மாவட்ட அரச…