-
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவி செனவிரத்ன
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை இன்று திங்கட்கிழமை (23) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கி வைத்துள்ளார்.
-
புதிய ஜனாதிபதிக்கு சீனா, ஜப்பான் மாலைதீவு உள்ளிட்ட பல நாடுகளின் தலைவா்கள் வாழ்த்து!
இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு பல நாடுகளின் தலைவா்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனா். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவை…
-
ஜனாதிபதியின் செயலாளராக நந்திக சனத் குமாநாயக்க நியமனம்..!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் செயலாளராக சனத் நந்திக குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். சனத் நந்திக குமாநாயக்க களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார். நந்திக சனத் குமாநாயக்க களனிப் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி அதிகார சபையில் கலாநிதி பட்டம் பெற்றவர். அவர் இலங்கை சுங்கத்தின் பிரதிப் பணிப்பாளராகவும் நவீனமயமாக்கல் செயல்முறையின் ஆலோசகராகவும்…
-
‘நான் மெஜிக்காரன் இல்லை; இந்த நாட்டின் சாதாரண ஒரு பிரஜை; ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட அனுரவின் வார்த்தைகள்
அனைத்து நாடுகளுடனும் அனைவருடனும் ஒன்றிணைந்து பொது கொள்கையுடன் செயற்படுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்தார். இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய இன்று காலை (23) பதவிப் பிரமாணம்…
-
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றார்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
-
பதவி விலகினார் தினேஷ் குணவர்தன!
புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து தினேஷ் குணவர்தன இன்று (23) பதவி விலகியுள்ளார். இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்களும் இன்று பதவியிலிருந்து விலகவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அமைச்சர்களின் தனிப்பட்ட…
-
மக்கள் வாழ்வில் பெரும் மாற்றமொன்றைக் கொண்டு வருவீர்கள்: தேசிய ஷூரா சபையின் வாழ்த்துச் செய்தி
நாட்டின் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு தேசிய ஷூரா சபை (23) வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஷூரா சபை கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. தேசத்தின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள உங்களுக்கு தேசிய ஷூரா…
-
ஜனாதிபதியாக இன்று பதவியேற்கின்றார் அநுரகுமார: இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்ய உள்ளார். இதன்படி, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அநுரகுமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம்…
-
அனைவரினதும் வெற்றி; கட்டம் கட்டமாக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்; புதிய ஜனாதிபதி அநுர வேண்டுகோள்
ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றமை முதல் வெற்றியாகும் என புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். சவால்களைத் தனி நபராலும், அணியாலும் வெற்றி கொள்ள முடியாது. நாட்டுக்காகக்…
-
நாட்டின் சகல பிரஜைகளுக்கும் நன்றி: அநுரவிடம் நாட்டை ஒப்படைக்கின்றேன்: ரணில் விக்கிரமசிங்க அறிக்கை
தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தற்போது நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் படி, புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…