ரஞ்சனை சந்திக்கவுள்ளார் சஜித் பிரேமதாச

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் சிறையிலுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்துப் பேசவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் படி இன்று காலை 11மணிக்கு அங்குனகொலபெலஸ்ஸ சிறையில் சந்திக்கவுள்ளார்.

நீதிமன்றத்தினை அவமதித்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டு சிறையிலுள்ள நிலையில், இன்றைய தினம் அவரைச் சஜித் பிரேமதாஸ சந்திக்கவுள்ளார்.

வாரத்தில் ஒருமுறை மாத்திரம் உறவினர் அவரைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தமிழக முதல்வர் விஜய்க்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து!

புதிய தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர...

உணர்ச்சி பொங்க முதலமைச்சராக பதவியேற்றார் த.வெ.க. தலைவர் விஜய்

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்றார். தவெக தலைவர் விஜய்க்கு முதல்வராக...

முதல்வராக விஜய் பதவியேற்பு: சென்னையில் ராகுல் காந்தி!:

தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று(மே 10) பதவியேற்கவுள்ள நிலையில்,...

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....