வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள யாஸ் சூறாவளி – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள யாஸ் சூறாவளி மேலும் தீவிரமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதி யாஸ் சூறாவளியானது வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இந்தியாவின் மேற்கு வங்காள கரையை கடக்கும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், மறு அறிவித்தல் வரை நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் வங்காள விரிகுடாவின் கடற்பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.