இன்றைய வானிலை முன்னறிவித்தல்

Date:

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.

நாடு முழுவதும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.

வடக்கு அந்தமான் கடற்பரப்புகளுக்கும் அண்மையாகவுள்ள கிழக்கு – மத்தியவங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கும் மேலாக 2021 மே 22 ஆம் திகதி அளவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம்உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அது மே 23 ஆம் திகதி அளவில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அது மேலும் வலுவடைந்து மே 24 ஆம் திகதி அளவில் ஒரு சூறாவளியாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியானது வடமேற்கு திசையில் நகர்ந்து மே 26 ஆம் திகதி காலை அளவில் மேற்கு வங்காள கரையை அடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கிழக்கு – மத்தியவங்காள விரிகுடாவிலும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளிலும் (12N – 20N, 85E – 100E) 2021 மே 21 ஆம் திகதியில் இருந்து மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

Popular

More like this
Related

இனவாத எதிர்ப்புகளை முறியடித்து சாதனை: ஆஸ்திரேலியாவில் எழுச்சியுடன் திறக்கப்பட்ட புதிய பள்ளிவாசல்.

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் இருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் உள்ள...

வலுசக்தி அமைச்சின் புதிய செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சின் செயலாளராக ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு...

இன்று நள்ளிரவு முதல் மீண்டும் QR

இன்று நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR முறைமை மீள நடைமுறைக்கு வருமென...

நிலக்கரி இறக்குமதியும் ஊழல் புகார்களும்: சீமெந்துத் தொழிற்சாலை முதல் அனல்மின் நிலையம் வரை புத்தளத்தின் தொடர் போராட்டங்கள்.

மின்சாரம் - எரிசக்தி அமைச்சரினதும் அமைச்சின் செயலாளரினதும் இராஜினாமாவைத் தொடர்ந்து  நமது...