பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனாவால் உயிரிழப்பு!

Date:

74 வயதான நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பு காரணமாக கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா தொற்றின் காரணமாக அவரது மனைவி குமுதாவும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சின்னத்தம்பி, காதல்கோட்டை, ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான படங்களில் சிறப்பான நகைச்சுவை, குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றவர் நடிகர் பாண்டு.

நடிகர் பாண்டு சிறப்பான ஓவியராகவும் இருந்தவர். அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை வடிவமைத்தவர் இவர்தான். திறமைமிக்க ஓவியரான பாண்டு, கேப்பிட்டல் என்ற நிறுவனத்தை நடத்தி, நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்பலகையை அழகுற வடிவமைத்துள்ளார்.

Popular

More like this
Related

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 4,570 ‘Smart Boardகள்’ வழங்க நடவடிக்கை: பாராளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பல கல்வி நவீனமயமாக்கல் திட்டங்களின் கீழ், நாடு...

இலங்கை – கத்தார் கூட்டுத் தொழிலாளர் குழு கூட்டம்: தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை!

இலங்கை மற்றும் கத்தார் நாடுகளுக்கு இடையிலான கூட்டுத் தொழிலாளர் குழுவின் அண்மைய...

மரண தண்டனை விதிக்கப்பட்ட அனோஜனை மீட்க அரசாங்கம் தீவிர நடவடிக்கை: பாராளுமன்றத்தில் அமைச்சர் விஜித ஹேரத் விளக்கம்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளியான சிவராசா...

காலநிலை அதிர்வுகள் தீவிரம்; இலங்கையின் நீர் விற்பனைக்கானது அல்ல

-ரிஸா யெஹியா பொறியியலாளர். காலநிலை அதிர்வுகள் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், உலகளாவிய முதலீட்டாளர்கள் நீர்வளத்தை...