சீனாவின் சின்ஜியாங் மாநிலம் ஒரு திறந்தவெளி சிறைச்சாலை –

Date:

சீனாவின் சின்ஜியாங் மாநிலம் ஒரு திறந்தவெளி சிறைச்சாலை என்று அமெரிக்க உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் தூர மேற்கு மாநிலமான சின்ஜியாங் மாநிலம் ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாகவே செயற்படுகின்றது என்று அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சிறைச்சாலையில் உய்குர் இன முஸ்லீம்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

என்றுசீனா தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ள வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிரதேசத்தில் மனித உரிமைகள்
கண்டபடி மீறப்பட்டு வருகின்றன. முஸ்லிம்கள் கிட்டத்தட்ட ஒரு சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது போலவே இங்கு வாழுகின்றனர்.

இந்த பிராந்தியம் முழுவதையும் சீனா தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாகத்தான் நடத்தி வருகின்றது.

அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் சர்வதேச சமய சுதந்திரங்களுக்கு பொறுப்பான பிரிவின் பணிப்பாளர் டேனியல் நடேல் இந்த தகவலை வெளியிட்டுள்ளார் .

மீழ் கல்வி ஊட்டல் முகாம் பல வந்த தொழில் முகாம் என்பன உட்பட பல முகாம்களில் இங்குள்ள முஸ்லிம்கள் துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் வாஷிங்டனில் இடம்பெற்று ஒரு செய்தியாளர் சந்திப்பின்போது நடேல் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் அறிக்கை ஒன்றையும் தயாரித்து உள்ளதாக அவர் குறிப்பிட்டார் ஒவ்வொரு தனி மனிதனுடைய நடமாட்டமும் இந்த பிராந்தியத்தில் மிக நுணுக்கமாக அவதானிக்கப்படுகின்றது முஸ்லிம்களுடன் வாழ்ந்து அவர்கள் பற்றிய தகவல்களை திரட்டுவதற்காக பெருந்திரளான உளவாளிகள் இங்கு செயற்பட்டு வருகின்றனர் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான், மியன்மார், ரஷ்யா, நைஜீரியா,சவூதி அரேபியா ஆகிய நாடுகளிலும் சிறுபான்மையினர் மோசமாக நடத்தப்படுவதாக இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கின் தந்தை கைது!

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் குழுத் தலைவனுமான ஷிரான் பாசிக்கின்...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்பு...

ஜனாதிபதியை சந்தித்தது ஜம்இய்யத்துல் உலமா: முஸ்லிம் சமூகத்தின் 8 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்...