குழந்தை பிறப்பு விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சி | அமைச்சர் சிசிர ஜயகொடி
இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக குழந்தை பிறப்பு விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடு காரணமாக திருமண வைபவங்கள் நடக்காத காரணத்தினால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னர் வருடம் ஒன்றிற்கு 350,000 குழந்தை பிறப்புக்கள் நாட்டில் பதிவாவதாக அவர் தெரிவித்துள்ளார்.கொரோனா தொற்று காரணமாக 3,500 பேர் உயிரிழந்துள்ள போதிலும் 350,000 குழந்தைகள் பிறக்கும் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.