ஹமாஸ் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்!

Date:

காஸாவில் உள்ள ஹமாஸ் தளங்களை இலக்குவைத்து குண்டு தாக்குதலை மேற்கொண்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.பலஸ்தீன பகுதியில் இருந்து ஏவப்பட்ட தீப்பிழம்புகளுடன் கூடிய பலூன்களுக்கு பதிலளிக்கும் விதமாக குறித்த வான் வெளிதாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

எவ்வாறாயினும் இந்த தாக்குதலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

 

காஸாவில் உள்ள ஹமாஸ் தரப்பினருக்கு சொந்தமான ஏவுகணை தளத்தினை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.எவ்வாறாயினும் ஹமாஸ் தரப்பிலிருந்து உடனடியான பதில்கள் எவையும் வழங்கப்படவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

இதற்கிடையில் காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் விமானங்களை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.பீட் ஹனூன் மற்றும் ஜபல்யா உட்பட மூன்று தளங்கள்ளை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் தரப்பினர் அறிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...