அமெரிக்காவில் விருது வென்ற குருநாகல் பறகஹதெனிய சேர்ந்த எம்.எஸ்.எம்.சப்றாஸ்

Date:

குருநாகல், பறகஹதெனிய கிராமத்தைச் சேர்ந்தவரும், அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராருமான எம்.எஸ்.எம்.சப்றாஸ், அமெரிக்க ஜனாதிபதியின் கையெழுத்திட்டு வழங்கப்படும் சான்றிதழ் விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தொழில் முயற்சியாண்மை முகாமைத்துவம் தொடர்பான பாடநெறிக்காக கடந்த ஜனவரியில் தெரிவுசெய்யப்பட்ட இவர் அமெரிக்க்காவிலுள்ள கேனல் பல்கலைக்கழகத்தில் தனது கற்கை நெறியைப் பூர்த்தி செய்து இந்த சான்றிதழ் விருதையும் பெற்று நாடு திரும்பியுள்ளார்.

ஏற்கனவே எமது நாட்டில் ஜனாதிபதியின் செயலாளர்களாக பதவி வகித்த பிரட்மன் வீரக்கோன் மற்றும் லலித் வீரதுங்க போன்றோர் இந்த சான்றிதழ் விருதைப் பெற்றுள்ளனர். அந்த வரிசையில் இலங்கையிலிருந்து தமிழ் பேசும் சமூகம் சார்பாக இந்த கற்கைநெறிக்குத் தெரிவு செய்யப்பட்டு கற்கை நெறியைப் பூர்த்தி செய்து சான்றிதழ் விருதைப் பெற்ற முதலாமவர் M.S.M. சப்றாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

பறகஹதெனியாவைச் சேர்ந்த முகம்மட் சௌபான் சொஹறா உம்மா தம்பதியின் புதல்வரான இவர்,2017 இல் இந்தியாவிலும், 2018, 2019,ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரிலும், 2019,2020ஆம் ஆண்டுகளில் சீனாவிலும் பல கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்துள்ளமை குறிப்பித்தக்கது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...