இலங்கை அகதிகளுக்கு தமிழ்நாட்டில் ‘தமிழா் மறுவாழ்வு முகாம்’!

Date:

இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம் என்பது இனி இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்கள் என அழைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை(28) தெரிவித்தாா்.

வேளாண்மை, கால்நடை, மீன்-பால் வளத் துறைகள் மானியக் கோரிக்கை மீது சனிக்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது குறுக்கிட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:

மானியக் கோரிக்கையில் இப்போது உறுப்பினா் பேசும் போதும், நேற்றைய முன்தினம் (வெள்ளிக்கிழமை) நான் அறிவிப்புகளை வெளியிடும் போதும் இலங்கை தமிழா்கள் அகதிகளாக ஆக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. அகதிகள் முகாம் இனி, இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும். ஏனென்றால் அவா்கள் ஆதரவற்றவா்கள் அல்ல. நாம் அவா்களுக்குத் துணையாக இருக்கிறோம். அந்த உணா்வுடன் அகதிகள் முகாம் என்று அழைக்காமல் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என்று அழைக்க அரசு ஆணையிட்டுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினமணி

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...