சீனா தயாரித்துள்ள தடுப்பூசிகள் கொவிட் வைரசுக்கு சிறந்த பயனளிப்பதாக ஆய்வில் தகவல்!

Date:

சீனா தயாரித்துள்ள கொவிட் தடுப்பூசிகள், பாதுகாப்பிலும் பயன் அளிப்பதிலும் சிறப்பாக செயல்படுவதாக, மருத்துவ ஆய்வில் தெரியவந்திருப்பதாக, ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவிலும் ,ஏனைய நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வில், இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சீன சுகாதாரத்துறையின் தடுப்பூசி மற்றும் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் ஜெங் ஜோங்வெய் கூறியிருக்கும் தகவலை மேற்கோள்காட்டியுள்ளது. சினோபாம், சினோவேக் ஆகிய இரு கொவிட் தடுப்பூசிகளை சீனா தயாரித்துள்ளது.

இவை இரண்டையும் உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது. உலகம் முழுவதும் 110 நாடுகளுக்கு, சுமார் 170 கோடி தடுப்பூசிகளை சீனா வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...

சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...