ஆப்கானிஸ்தானில் மாணவிகள் ஹிஜாப் அணியாததால் பாடசாலையை மூடிய தலிபான்கள்!

Date:

பாடசாலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய உடை கட்டுப்பாடுகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா? என்பதை ஆய்வு செய்ய தலிபான்கள் கண்காணிப்பாளர்களை நியமித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து பெண்கள் கல்வி பயிலும் விவகாரத்தில் பல்வேறு கெடுபிடிகளை விதித்து வருகின்றனர்.

பாடசாலைகளில் மாணவிகளுக்கு கடுமையான உடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றாத பள்ளிகள் மற்றும் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.

அந்தவகையில் பல்க் மாகாணத்தை சேர்ந்த ஒரு பள்ளியில் பயின்று வந்த மாணவிகள் கடந்த சில நாட்களாக ஹிஜாப் அணியாமலும், ஹிஜாப் அணிந்தும் முகத்தை மூடாமலும் வந்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த பள்ளியை தலிபான்கள் மூடி விட்டதாக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்து உள்ளது. பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய உடை கட்டுப்பாடுகள் சரியாக பின்பற்றப்படுகின்றனவா? என்பதை ஆய்வு செய்ய தலிபான்கள் கண்காணிப்பாளர்களை நியமித்து உள்ளனர்.

இந்த கட்டுப்பாடுகளை பின்பற்றாத ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் எந்தவித விளக்கமும் கேட்காமல் பள்ளியில் இருந்து நீக்கப்படுவதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

இதேவேளை கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்தது முதல் நாட்டில் குண்டுவெடிப்பு, தற்கொலைப்படை தாக்குதல்களை ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தி வருகின்றறமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முஸ்லிம்கள் போன்று போலி அடையாளத்துடன் மத வெறுப்பைப் பரப்பிய 21 வயது இளைஞன் கைது!

இலங்கையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி, சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே...

காசா போரில் கொல்லப்பட்ட பாலஸ்தீனப் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 263 ஆக உயர்ந்தது.

காசா பகுதியில் 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில்,...

ரஷ்யாவில் நடைபெற்ற கூட்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியை நிறைவு செய்து இலங்கை இராணுவ அணி நாடு திரும்பியது!

ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் ரஷ்ய ஆயுதப்படைகளுடன் இணைந்து நடைபெற்ற கூட்டு பயங்கரவாத...