புதிய பிரதமரால் இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியும்: அமெரிக்க தூதுவர்

Date:

புதிய பிரதமர் உட்பட அரசாங்கம் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும்முடியும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்கள் விரும்பும் அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுத்து நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் தூதுவர் இதன்போது, வலியுறுத்தினார்.

மேலும், இலங்கை-அமெரிக்கா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் என நம்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இலங்கையில் ஜனநாயகத்தை வலுப்படுத்த அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளித்து வருவதற்கு சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் பிற்பகலில் மழை:6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

கபில சந்திரசேனவின் மரண விசாரணைகள் மீள ஆரம்பம்

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில...

பசில் ராஜபக்ஷவை கைது செய்ய உத்தரவு!

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு மாத்தறை நீதிவான்...

வெள்ளப் பெருக்கு குறித்து எச்சரிக்கை!

அடுத்த 48 மணி நேரத்தில் களனி ஆற்றுப் படுகையை அண்மித்த (தாழ்வான)...