26 சீன விமான சேவைகளை தற்காலிகமாக இரத்து செய்தது அமெரிக்கா!

Date:

அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு செல்லும் 26 விமானங்களின் சேவையை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பை காரணம் காட்டி அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், யூனைடெட் ஏர்லைன்ஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்களின் 26 விமான சேவைகளை சீனா இரத்து செய்திருந்தது.

இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு செல்லும் 26 விமானங்களின் சேவையை அமெரிக்க அரசு தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.

இதன்படி ஷியாமென், ஏர் சீனா, சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் மற்றும் சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஆகிய 26 விமானங்களின் சேவையை செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 28 ஆம் திகதி வரை கொரோனா காரணமாக அமெரிக்க தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.

லொஸ் ஏஞ்சல்ஸில் இருந்து 19 விமானங்களின் சேவையும், நியூயோர்க்கில் இருந்து 7 சீனா கிழக்கு விமானங்களின் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பொறுப்பற்ற செயல் என்று வொஷிங்டனில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆனால் அமெரிக்காவில் இருந்து புறப்படும் போது கொரானா தொற்று இல்லாத பயணிகளுக்கும் சீனா சென்றபிறகு தொற்று உறுதி செய்யப்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் வருடாந்தம் ஆஸ்துமாவினால் 6% மரணங்கள் பதிவு!

இலங்கையில் ஒவ்வோர் ஆண்டும் நிகழும் ஒட்டுமொத்த மரணங்களில் சுமார் 6% மரணங்கள் ஆஸ்துமா...

ஷாணி அபேசேகரவுக்கு பதவி உயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷாணி அபேசேகரவை,...

வெசாக் வாரம்: பொலித்தீன், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்குமாறு கோரிக்கை

எதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அலங்காரங்கள் மற்றும் தன்சல் வழங்கலின் போது,...

குறைந்த காற்றழுத்தப் பகுதி நீடிப்பு: இன்று பல பகுதிகளில் 100 மி.மீ மழை

இலங்கையின் வடகிழக்கு பதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த வலயம் மேலும் நீடிப்பதுடன்...