இலங்கைக்கு தொடர்ந்தும் உதவுவோம்: அமெரிக்கா உறுதியளிப்பு!

Date:

இலங்கை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு அமெரிக்கா உதவிகளை வழங்கும் என்று அமெரிக்க ராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் உறுதியளித்துள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை நேற்று அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் சந்தித்த தருணத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பிளிங்கன் இந்த தகவலை வெளியிட்டார்.

இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான ராஜதந்திர உறவுக்கு அடுத்த வருடத்துடன் 75 அகவை பூர்த்தியாகின்றது.

இந்நிலையில் அமெரிக்கா – இலங்கைக்கு அன்பளிப்பு, கடன் மற்றும் ஏனைய உதவிகள் என்ற வகையில் 240 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.

இந்த உதவி திட்டங்கள் தொடர்ந்தும் வழங்கப்படும் என்று பிளிங்கன் உறுதியளித்தார்.

தமது சந்திப்பின் போது, உலக காலநிலை விடயங்கள், அதில் இலங்கைக்கான திட்டங்கள் மற்றும் இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாக பிளிங்கன் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் கருத்துரைத்த, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்காவின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாடுகள், அதற்கான அமரிக்காவின் ஏற்பாடுகள் குறித்தும் அமைச்சர் அலி சப்ரி இலங்கை சார்பில் நன்றியை தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...

சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...