களனி – கல்பொரல்ல சந்திக்கு அருகே தீ விபத்து!

Date:

இன்று களனி பிரதேசத்தில் – கல்பொரல்ல சந்தியில் அமைந்துள்ள ஹேமாஸ் தனியார் வைத்தியசாலைக்கு சொந்தமான களஞ்சிய கட்டிடம் காலை திடீரென தீ பரவியுள்ளது.

குறித்த இடத்திற்கு களனி மாநகர சபையினால் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நீர் பீரங்கிகளை அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, ஆனால் உள் இயந்திரக் கோளாறால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிசார் கருதுகின்றனர்.

தீயினால் ஏராளமான பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டாலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சம்பவம் தொடர்பில் தற்போது பொலிஸாரினால் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Popular

More like this
Related

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...